பாசிச ஆட்சியை தமிழ்நாட்டு எல்லைக்குள் நுழைய விடாமல் தடுக்க வேண்டும் ஓரணியில் தமிழ்நாடு துவக்க நிகழ்ச்சியில் திமுக துணை பொது செயலாளரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா

கட்சித் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்;

Update: 2025-07-02 14:14 GMT
தமிழர்களின் திராவிட நாகரிகம்,மொழி, சுயமரியாதை, கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் ஒன்றிய பாசிச ஆட்சியை தமிழ்நாட்டு எல்லைக்குள் நுழைய விடாமல் தடுக்க வேண்டும் ஓரணியில் தமிழ்நாடு துவக்க நிகழ்ச்சியில் திமுக துணை பொது செயலாளரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா பேச்சு... நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள நாடாளுமன்ற அலுவலகத்தில் மாவட்ட கழக பொறுப்பாளர் கே எம் ராஜு தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு செயலி மூலம் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்வு மற்றும் திமுக அரசின் நான்காண்டு சாதனையை வீடு வீடாக சென்று சேர்த்திடும் துவக்க விழா நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும் ,திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா கலந்துகொண்டு பேசிய போது :- கீழடியில் தமிழர்களின் மொழி, பண்பாடு, நாகரிகம் எப்படிப்பட்ட பழமை வாய்ந்தது என்பதை உரிய ஆதாரத்துடன்,அதன் வரலாற்றுகளுடன் கூடிய தகவல்களை ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட அலுவலர் அறிக்கை தாக்கல் செய்த பிறகும் கூட ஒன்றிய அரசு வேண்டுமென்றே திராவிட நாகரிகத்தை, தமிழர்களின் மொழி, பண்பாடு, சுயமரியாதை கலாச்சாரங்களை ஒப்புக் கொள்ள மனமில்லாமல் ஒன்றிய அரசு தமிழர்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கீழடியை ஆய்வை நிராகரித்ததை குறிப்பிட்ட ஆ.ராசா ,தமிழ்நாட்டின் உரிமைகள், சுயமரியாதை காப்பாற்ற வேண்டிய நிலை இருப்பதாகவும் ஒன்றியத்தில் ஆட்சியில் உள்ள பாசிச ஆட்சியை தமிழ்நாட்டு எல்லைக்குள் நுழைய விடாமல் தடுக்க வேண்டிய வல்லமை மிக்க ஒரே தலைவராக தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இருப்பதாக கூறினார். எதிர்காலத்தில் திமுக தலைவரும் , தமிழ்நாட்டு முதலமைச்சருமான மு க ஸ்டாலின் இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற்றால் தமிழ்நாடு வெற்றி பெறும் தமிழ்நாட்டின் சுயமரியாதை ,கலாச்சாரம், தமிழ்நாட்டு உரிமைகள் காப்பாற்றப்படும் அதற்காக மொழி, மதங்களைக் கடந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

Similar News