செஞ்சியில் தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய முன்னாள் அமைச்சர்
மருத்துவ காப்பீட்டு அட்டையும் வழங்கினார்;
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (TAHDCO) "தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியம்" தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு அனைவருக்கும் அடையாள அட்டை மற்றும் மருத்துவ காப்பீட்டு அட்டை உள்ளிட்டவை வழங்கினார். உடன் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.