மயிலம் தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

முன்னாள் அமைச்சர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்;

Update: 2025-07-02 16:46 GMT
தி.மு.க., வில் 'ஓரணியில் தமிழ்நாடு' எனும் செயலி மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. இதையொட்டி, மயிலம் தொகுதிக்கு உட்பட்ட வல்லம் ஒன்றியத்திற்கான, ஓட்டுச்சாவடி பாக முகவர்கள், டிஜிட்டல் முகவர்களுக்கான பயிற்சிக்கூட்டம் அதே பகுதியில் நடந்தது.தொகுதி மேற்பார்வையாளர் புகழேந்தி முன்னிலை வகித்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பயிற்சி கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.இதில் முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, மாவட்ட அவை தலைவர் சேகர், தலைமை தீர்மானக்குழு உறுப்பினர்.சிவா, ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார், ஒன்றிய செயலாளர்கள்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News