வானூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
வானூர் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது;
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில் வரும் 10, 11ம் தேதிகளில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பயணம் மேற்கொள்ள உள்ளார். வரும் 11ம் தேதி வானுார் தொகுதிக்கு சுற்றுபயணம் மேற்கொள்ள இருப்பதை ஒட்டி, வானுார் மற்றும் கிளியனுார் ஒன்றிய நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது.என்.பி.ஆர்., திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் சதீஷ்குமார், பக்தவச்சலம், கோட்டக்குப்பம் நகர செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தனர்.எம்.எல்.ஏ.,சக்ரபாணி தலைமை தாங்கி, சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள பழனிசாமிக்கு வரவேற்பு அளிப்பது, மக்களை திரட்டுவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.