கோவை: பேருந்து பறிமுதல் – டிரைவர், கண்டக்டர்களுக்கு பயிற்சி பெற உத்தரவு

பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.;

Update: 2025-07-03 04:23 GMT
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஆதிமாதையனூர் செல்லும் தனியார் பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, கோவை கலெக்டர் பவன்குமாரின் உத்தரவின்படி, வட்டார போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார் பேருந்தை நேற்று பறிமுதல் செய்தார். போக்குவரத்து விதிமுறைகளை மீறிய காரணத்தால், பேருந்து வட்டார அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும், டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு பொள்ளாச்சியில் உள்ள புத்தாக்க பயிற்சி மையத்தில் இரண்டு நாள் பயிற்சி வகுப்பில் பங்கேற்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

Similar News