கோவையில் புதிய சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா!
இருகூரில் திறக்கப்படவுள்ள சிறப்பு மருத்துவமனை விழாவில் அமைச்சர்கள் பங்கேற்பு.;
கோவை ராமநாதபுரத்தில் செயல்படும் ஹார்ட் பவுண்டேஷன் மருத்துவமனை, புதிய கிளையாக ருகூர் எல் அண்டு டி பைபாஸ் சாலையில் புக்ரா என்ற பெயரில் 150 படுக்கைகள் கொண்ட பல்துறை சிறப்பு மருத்துவமனையை நிறுவியுள்ளது. இந்த புதிய மருத்துவமனையின் திறப்பு விழா ஜூலை 4ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு பேச உள்ளனர் என டாக்டர் வி. ராஜேந்திரன் மற்றும் டாக்டர் க.பூ. இளங்கொடி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.