தேவர் காலனியில் நகர்ப்புற நல்வாழ்வு மையம் திறப்பு
மதுரை தேவர் காலனியில் நகர்ப்புற நல்வாழ்வு மையத்தை முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்;
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் அவர்கள், காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதே நேரத்தில் மதுரை மாநகராட்சியில் உள்ள தேவர் காலனியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தை திறந்து வைத்துச் சிறப்பித்த நிகழ்வில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார். உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.