அரசு ஊழியரை மிரட்டி பணம் பறித்த தவெக பெண் நிர்வாகி கைது
திண்டுக்கல்லில் அரசு ஊழியரை மிரட்டி பணம் பறித்த தவெக பெண் நிர்வாகி கைது செய்து சிறையில் அடைப்பு;
திண்டுக்கல்லை சேர்ந்த செல்வம்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் அரசு ஊழியர் ஆவார். இந்நிலையில் திண்டுக்கல், சின்னஅய்யங்குளம், பகுதியை சேர்ந்த வடிவேல் மனைவி ரீத்தா(46) தமிழக வெற்றிக்கழக நிர்வாகியாவர் இவர் செல்வத்துடன் பழகி திருமணத்தை மீறிய உறவு வைத்து இதை பயன்படுத்தி சிலமுறை பணம் வாங்கியதாக கூறப்படுகிறது இந்நிலையில் மீண்டும் பணம் கேட்டு அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக செல்வம் அளித்த புகாரின் பேரில் திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட ரீத்தாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நிலக்கோட்டை சிறையில் அடைத்தனர். ரீத்தா மீது கஞ்சா வழக்கு, விபச்சார வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.