கல்வி கட்டணம் உயர்வை கண்டித்து மாணவர்கள் போராட்டம்
மதுரை பெருங்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் கல்வி கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
மதுரை பெருங்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் சுமார் 2000 மாணவர்கள் பயின்று வரும் நிலையில் இந்த ஆண்டு அரசு நிர்ணயம் செய்த கட்டணத் தொகையை விட மூன்று மடங்கு அதிகரித்து கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் கேட்டதால் கல்லூரியின் வாசலில் எதிர்ப்பு தெரிவித்தனர்.தமிழக அரசு நிர்ணயித்த கல்லூரி கட்டணத்தை செயல்படுத்த வேண்டும் என்று மாணவர்கள் கல்லூரி வாசலில் கேட் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு காவல்துறை பேச்சு வார்த்தை நடத்தியும் மாணவர்கள் கல்லூரி முதல்வர் சந்திரன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தங்கள் கோரிக்கைகளை மாணவர்களிடமிருந்து கல்லூரி நிர்வாகம் மனுவாக பெற்று பரிசீலனை செய்யப்படும் என்று கூறப்பட்டது.