ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் முதல் கையெழுத்து
திண்டுக்கல் துரைராஜ் நகரில் ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை ஐ.பெரியசாமி ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் முதல் கையெழுத்திட்டு செயலி முறையை துவங்கி வைத்தார்;
தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணையின் படி தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க, மாநில சுயாட்சியை மீட்டெடுக்க தி.மு.கழகம் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்கும் வகையில் "ஓரணியில் தமிழ்நாடு" இணையதள உறுப்பினர் சேர்க்கை பயிற்சி முகாமை திமுக துணைப் பொதுச் செயலாளர் அமைச்சர் பெரியசாமி முதல் கையெழுத்திட்டு செயலி முறையில் பதிவிறக்கம் செய்யும் திட்டத்தினை தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ ,மாநகரச் செயலாளர் ராஜப்பா, மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணைச் செயலாளர் பிலால் உசேன், ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை, மாநகர பொருளாளர் சரவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.