புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறந்து வைப்பு
மார்க்கம்பட்டியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்;
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு முழுவதும் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், 50 ஊரக மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். அந்தவகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஆடலுார் பன்றிமலை மற்றும் மார்க்கம்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் நகர்ப்புற நலவாழ்வு மையம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டுள்ளன. அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், மார்க்கம்பட்டியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பங்கேற்று குத்துவிளக்கேற்றி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலர்(பழனி) மரு.அனிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ், மருத்துவப் பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.