குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பல்வேறு வகையான மானிய திட்டங்களில் பயன்பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தகவல்;

Update: 2025-07-03 12:14 GMT
தமிழ்நாடு அரசு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு வகையான மானிய உதவிகளை வழங்கி வருகிறது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கொள்கை 2021-ல் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான மானிய திட்டங்கள் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதிவாய்ந்த நிறுவன உரிமையாளர்கள் மேற்காணும் திட்டத்தில் பயன்பெற https://www.msmetamilnadu.tn.gov.in/incentives என்ற இணைய முகவரியை தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம். இதுகுறித்து, மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, திண்டுக்கல் அவர்களை நேரிலோ அல்லது 0451-2904215, 2471609 மற்றும் 8925533943 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News