காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் கார்த்திக் வெளிநடப்பு பரபரப்பு

திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்திலிருந்து காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் கார்த்திக் வெளிநடப்பு பரபரப்பு;

Update: 2025-07-04 10:30 GMT
திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளது. மாநகராட்சி மாமன்ற இயல்பு கூட்டம் இன்று 04.07.25 மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணை மேயர் ராஜப்பா, ஆணையர் செந்தில் முருகன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கார்த்திக் 21 வது வார்டு மாமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். கூட்டம் துவங்கியவுடன் எழுந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கார்த்திக் 21 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் திண்டுக்கல் பேருந்து நிலையம், ஸ்பென்சனர் தெரு, இபி காலனி சௌராஷ்டிரா புரம் ஆகிய பகுதிகள் வருகிறது. இந்நிலையில் பேருந்து நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பேருந்து நிலையம் பகுதிகளில் நிழற்குடை மின்விளக்கு அமைக்க வேண்டும் என பலமுறை மாநகராட்சி ஆணையரிடம் முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை இதனால் பொதுமக்கள் வெறும் அவஸ்தைக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தனது வார்டுக்கு உட்பட்ட பேருந்து நிலையத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் மாமன்ற உறுப்பினரான தன்னை அழைப்பதில்லை என்றும் இதற்கு வருத்தம் தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக கூறி கூட்ட அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

Similar News