கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
மதுரை வாடிப்பட்டி அருகே கடன் தொல்லையால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்;
மதுரை வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை மீனாட்சி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த காமராஜ் மகன் கார்த்திகேயன் (27) என்பவர் விவசாயக் கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளான நிலையில் பல்வேறு இடங்களில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் மன உளைச்சலுடன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் (ஜூலை .3) இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.