பஞ்சாயத்து அலுவலகம் அருகே வீணாக சென்ற குடிநீர்
கீழநத்தம் பஞ்சாயத்து அலுவலகம்;
திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தம் பஞ்சாயத்து அலுவலகத்தின் அருகே இன்று திடீரென குடிநீர் பைப் லைன் உடைந்து தண்ணீரானது சீறிப்பாய்ந்து சென்றது. இதன் காரணமாக சாலை முழுவதும் குடிநீரானது நிரம்பி வழிந்தது. தற்பொழுது வெளுத்து வாங்கும் இந்த வெயில் காலகட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வரும் நிலையில் இவ்வாறு குடிநீர் வீணான சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.