முறையாக குடிநீர் வழங்க மேயருக்கு கோரிக்கை!
தூத்துக்குடி 34வது வார்டு பகுதியில் சீரான குடிநீர் வழங்க வேண்டும் : கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளனார்;
தூத்துக்குடி மாநகராட்சி 34வது வார்டு பகுதியில் சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என்று மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேயருக்கு அனுப்பியுள்ள மனுவில், "மாநகராட்சி 34வது வார்டு பகுதிகளான ஆசிரியர் காலனி, கந்தன் காலனி, 3வது மைல், தபால்தந்தி காலனி, பசும்பொன் நகர், அசோக் நகர், ராஜீவ் நகர் ஆகிய பகுதி மக்கள் கடந்த இரண்டு மாதகாலமாக குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே, கடந்த காலங்களில் வழங்கியது போல் குடிநீர் வால்வு அமைத்து தனித்தனியாக குடிநீர் வழங்க வேண்டும். வால்வ் தொட்டி அனைத்தும் உடைந்து குடிநீர் வீணாகிறது. வால்வில் ரோப் இல்லாமல் தண்ணீர் கசிவு ஏற்பட்டு தண்ணீர் தொட்டியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, மேற்கண்ட குறைகறை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனார்.