சங்கரன்கோவில் அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கீழரெங்கையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் மகன் செந்தமிழ் செல்வன் (25) என்ற வாலிபர் வீட்டில் குடும்பப் பிரச்சினை காரணமாக வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து சென்ற போலீசார் வாலிபர் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், இது குறித்து குருவிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.