செக்யூரிட்டி மயங்கி விழுந்ததில் மரணம்
மதுரை கருமாத்தூர் கல்லூரியில் செக்யூரிட்டியாக பணியாற்றியவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.;
மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள கருமாத்துரை சேர்ந்த அய்யனார் என்பவர் கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று (ஜூலை.5) பணியில் இருந்த போது திடீரென்று மயங்கி கீழே விழுந்தார் . அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . மருத்துவர்கள் பரிசோதித்து உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து மனைவி அழகம்மாள் நேற்று (ஜூலை .5) இரவு செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.