தஞ்சாவூர் மாவட்டத்தில் அன்புச்சோலை மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம் 

ஆட்சித்தலைவர் தகவல்;

Update: 2025-07-06 13:56 GMT
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,  சமூகநலன் மற்றும் மகளிர் துறையின் மூலமாக முதியோர் நலன் கருதி, தஞ்சாவூர் மாவட்டத்தில் அன்புச்சோலை மையங்கள் அமைக்க விருப்பமுள்ள தொண்டு நிறுவனத்திடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  விண்ணப்பங்களை 08.07.2025 அன்றுக்குள் அறை எண்.303, 3வது தளம். மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம். தஞ்சாவூர் என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

Similar News