நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அளக்கரை ரேலியா வனப்பகுதியில் நேற்று இரவு துப்பாக்கியுடன் வாகனத்தில் வந்த கர்நாடகாவை சேர்ந்த ஒரு பெண் உட்ப்பட ஐந்து இளைஞர்களை வனத்துறையினர
கர்நாடகாவை சேர்ந்த ஒரு பெண் உட்ப்பட ஐந்து இளைஞர்களை வனத்துறையினர் கைது செய்து விசாரணை .........;
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அளக்கரை ரேலியா வனப்பகுதியில் நேற்று இரவு துப்பாக்கியுடன் வாகனத்தில் வந்த கர்நாடகாவை சேர்ந்த ஒரு பெண் உட்ப்பட ஐந்து இளைஞர்களை வனத்துறையினர் கைது செய்து விசாரணை ......... நீலகிரி மாவட்டத்தில் கேரளாவில் இருந்து வந்து வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பல் ஆங்காங்கே பிடிபட்டு வரும் நிலையில் நேற்று இரவு கட்டப்பட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட ரேலியா பகுதியில் கட்டப்பட்டு வனச்சரகர் சீனிவாசன் தலைமையில் வனத்துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது கேரளா பதிவன் கொண்ட ஜீப் ஒன்றை வாகன தணிக்கை செய்தனர் வாகனத்தில் துப்பாக்கி பதிக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இதனை தொடர்ந்து வாகனத்தில் பயணித்த கர்நாடகாவை சேர்ந்த சூர்யகுமார்(27), ரேகன் அட்சயா(28), அக்ஷய்(28), விக்னேஷ்(29) அனுஷ்கா(23) ஒரு பெண் உட்ப்பட ஐந்து வாலிபர்களை கட்டப்பட்டு வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர்களிடமிருந்து உரிமம் இல்லாத ரைபிள் மற்றும் அதன் தோட்டாக்கள் இரண்டு காற்றழுத்த துப்பாக்கி மற்றும் அதன் ஈய,தோட்டாக்கள் மற்றும் கடமான் கொம்பு இரண்டு ஜோடி வெள்ளிமான் கொம்புகள் டார்ச் லைட்டுகள் வேட்டைக்கு பயன்படுத்திய ஜீப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட வன அலுவலர் கௌதம் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.