உதகை தாவிரவியல் பூங்காவில் சாரல் மழையில் சுற்றுலா பயணிகள் பரவசம்

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா மையமான உதகை தாவிரவியல் பூங்கா, கடந்த சில நாள்களாக பெய்து சாரல் மழையில் ஒரு புதிய அழகை அடைந்தது;

Update: 2025-07-06 15:41 GMT
உதகை தாவிரவியல் பூங்காவில் சாரல் மழையில் சுற்றுலா பயணிகள் பரவசம் நிலக்கரி மாவட்டத்தின் சுற்றுலா மையமான உதகை தாவிரவியல் பூங்கா, கடந்த சில நாள்களாக பெய்து சாரல் மழையில் ஒரு புதிய அழகை அடைந்தது . சனி மற்றும் ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு, மாநிலத்தின் பல பகுதிகளிலும் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள், இயற்கையின் இளமையை அனுபவிக்க வந்தனர். மழைத்துளிகள் பசுமை இலைகளை நனைத்து கண்ணுக்கும் மனதுக்கும் விருந்து கொடுத்தன. பூங்காவின் உதிர்ந்த மலர்கள், நீர்த்துளிகளால் மின்னும் இலைகள், மெல்லிய காற்றுடன் துள்ளும் வண்ணத்துப்பூச்சிகள் என ஒவ்வொன்றும் பார்வையாளர்களை மயக்க செய்தன. பனிமூட்டத்துடன் சாரல் மழை கலந்து குளிரில் மூடியது. இந்நிலையில், குடும்பங்களாகவும், நண்பர்கள் கூட்டமாகவும் வந்த சுற்றுலாப் பயணிகள், புகைப்படங்கள் எடுத்தபடி, பசுமையின் நடுவே ஒரு இன்ப தருணத்தைக் கழித்தனர். சிறுவர்கள் மழையில் கும்மாளமிட , பெரியோர் இயற்கையின் அமைதியை ரசித்தனர் . குறிப்பாக, பூங்காவில் உள்ள அரிய வகை மரங்கள் மலர்கள் , நவீன பனிக்குளிரில் மேலும் கவர்ச்சியடைந்தன. . சுற்றுலாப் பயணிகள், “இது போன்ற இயற்கை காட்சிகள் மனதிற்கு ஒரு பெரிய ஓய்வு. உதகையில் பசுமை, மழை, பனி — மூன்றும் ஒரே நேரத்தில் கிடைக்கும் அதிசயம்” என தெரிவித்தனர். : உதகை தவிரவியல் பூங்கா, எப்போதும் பசுமை சூழலுடன் இருந்தாலும், சாரல் மழையில் அது இன்னும் அதிகம் உயிர்ப்புடன் காட்சியளிக்கிறது. இதுவே தற்போது சுற்றுலாப் பயணிகளின் பெரும் ஈர்ப்பாக மாறியுள்ளது.

Similar News