புலி வேடம் அணிந்து நேர்த்திக்கடன்

திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் மொகரம் திருநாளை முன்னிட்டு புலி வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தி பஞ்சா சவாரி ஊர்வலம் நடைபெற்றது;

Update: 2025-07-06 19:02 GMT
திண்டுக்கல் ரவுண்ட் ரோடு புதூர் பகுதியில் மொகரம் திருநாளை முன்னிட்டு இஸ்லாமியர்கள் நேர்த்திக்கடன் வைத்துக்கொண்டு தங்களுக்கு நிறைவேற்றிய நேர்த்திக்கடனுக்காகவும் வேண்டுதலுக்காகவும் இமாம் உசேனுக்கு கடலை, சக்கரை, பேரிச்சம்பழம் ,குளிர்பானங்கள், பல வகைகள் உள்ளிட்டவைகள் வைத்து மல்லிகை பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இமாம் உசேன் பஞ்சா சவாரியானது நடைபெற்றது இந்த பஞ்ச சாவாரியில் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன் நிறைவேறியதற்காக புலி வேடம் அணிந்து நேர்த்திக் கடனை செலுத்தினர் இந்த புலி ஆட்டத்தை பார்ப்பதற்காக திண்டுக்கல், மதுரை, பெரியகுளம், தேனி , பாலகிருஷ்ணாபுரம், பேகாம்பூர் , அசனாத்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இஸ்லாமியர்கள் மற்றும் அனைத்து சமூகத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்து வழிபட்டனர்.

Similar News