சூதாடியவர் கைது

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது;

Update: 2025-07-07 03:29 GMT
ஈரோடு மாவட்டம், கடத்தூர், இண்டியம்பாளையம் பகுதியில் உள்ள நஞ்சன் தோட்டம் என்னுமிடத்தில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கடத்தூர் போலீசாருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சத்தியமங்கலம், அரசூர் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி (65), உக்கரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (40), புதுகொத்துக்காடு பகுதியை சேர்ந்த சுப்பாராவ் (42), முனியன் (65) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சீட்டு கட்டு மற்றும் பணம் ரூ. 1,940 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Similar News