வாகன விபத்தில் போட்டோகிராபர் பலி
மதுரை திருமங்கலம் அருகே நடந்த சாலை விபத்தில் போட்டோகிராபர் பலியானார்;
மதுரை திருமங்கலம் கிறிஸ்டியன் காலனியை சேர்ந்த கலைச்செல்வன்(35) காமராஜர்புரம் பகுதியில் ஸ்டுடியோ வைத்துள்ளார். இவரது உறவினர் தினேஷ்குமார் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவருக்காக நேற்று முன்தினம் (ஜூலை.5) இருவரும் நாகமலை புதுக்கோட்டையில் புதிய டிரை சைக்கிள் வாங்கி அங்கிருந்து திருமங்கலத்திற்கு இருவரும் மாற்றி மாற்றி வந்தனர் போது கப்பலுார் அருகே கலைச்செல்வன் டிரை சைக்கிளை ஓட்டி வந்தார். அவருக்குப் பின்னால் தினேஷ்குமார் இருசக்கர வாகனத்தில் வந்தார். கோவையில் இருந்து விருதுநகருக்கு மதன்குமார் என்பவர் ஓட்டிச் சென்ற கார் இருசக்கர வாகனத்தில் மீது மோதி, அதேவேகத்தில் டிரைசைக்கிள் மீதும் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த தினேஷ்குமார் ரோட்டோரம் விழுந்தார். இதில் கலைச்செல்வன் தடுப்பில் விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று( ஜூலை.6) உயிரிழந்தார்.. திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்