செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் மனு
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்;
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த வழக்கறிஞர் சண்முகசுந்தர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அதில் மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையரின் சுற்று நீதிமன்ற விசாரணை அறிக்கை அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் திட்டமான அரசாணை 82ல் முறைகேடு செய்த வடக்கு வள்ளியூர் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.