அவலூர்பேட்டையில் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கிய திமுக ஒன்றிய செயலாளர்
முன்னாள் நகர செயலாளர் நினைவு நாளை ஒட்டி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது;
விழுப்புரம் மாவட்டம்,மேல்மலையனூர் ஒன்றியம், அவலூர்பேட்டை திமுக முன்னாள் நகர கழக செயலாளர் S.P. பிரபாகரன் அவர்களின் 2 - ஆண்டு நினைவாக கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை திமுக ஒன்றிய செயலாளர் ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் வழங்கி வாழ்த்தினார். உடன் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்