பள்ளி சீருடையுடன் தரையில் அமர்ந்து தர்ணா
வாளிசெட்டிபட்டி சேர்ந்த கிராம மக்கள் பள்ளி குழந்தைகளை சீருடையுடன் அழைத்து வந்து ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு;
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா பிலாத்து அடுத்த வாளிசெட்டிபட்டி சேர்ந்த கிராம மக்கள் பள்ளி குழந்தைகளை சீருடையுடன் அழைத்து வந்து மனு அளித்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் பகுதியைச் சேர்ந்த 36 பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஜாதி சான்றிதழ் கேட்டு இணையதளங்களும் விண்ணப்பித்தோம். பின்னர் அது தொடர்பான விசாரணையின் போது எங்கள் குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க இயலாது என்று வருவாய்த்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே 40க்கும் மேற்பட்டோருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பல்வேறு காரணங்களை காட்டி, எங்களுக்கு ஜாதி சான்றிதழ் தர மறுத்து வருகின்றனர். இதனால் எங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முடியவில்லை. எங்கள் குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தனர்.