ஆன்லைன் பட்டா கேட்டு தர்ணா போராட்டம்
ஆதிதிராவிடர் காலனி பொதுமக்கள் ஆன்லைன் பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு;
திண்டுக்கல் அருகே செட்டிநாயக்கன்பட்டி, ஆலக்குவார்பட்டி ஆதிதிராவிடர் காலனி மக்களுக்கு கடந்த 1997-98-ம் ஆண்டுகளில் எங்கள் பகுதியை சேர்ந்த பலருக்கு ஆலக்குவார்பட்டியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அதில் பலர் வீடு கட்டியும், தற்போது வரை வீட்டுவரி செலுத்தியும் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நாங்கள் ஆன்லைன் பட்டா கேட்டு விண்ணப்பித்தோம். ஆனால் அதிகாரிகள் தர மறுக்கின்றனர். நாங்கள் வசிக்கும் பகுதியில் எங்கள் பெயரில் வீட்டுமனை பட்டா இல்லை என்று கூறுகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து எங்களுக்கு ஆன்லைன் பட்டா வழங்க வேண்டும். மனுவில் தெரிவித்திருந்தனர். மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதன் பிறகு மனு கொடுக்க வந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அதுவரை கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல வைத்தனர்.