திண்டுக்கல் மேற்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் திறப்பு விழா

திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் திண்டுக்கல் மேற்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்;

Update: 2025-07-07 14:32 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் வருவாய் வட்டாட்சியர் அலுவலக கட்டடங்களை காணொலிக்காட்சி வாயிலாக இன்று(07.07.2025) திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் ஆகியோர் திண்டுக்கல் மேற்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள். இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) வினோதினி., மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் ஜெயபிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News