கடலூர்: ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
கடலூரில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;
கடலூர் மாவட்ட காவல்துறை மற்றும் சிப்காட் கெளமன் பார்மா சார்பில், ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியில் காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS, கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் ரூபன்குமார் ஆயோர்கள் ஹெல்மெட் அணிந்து தலைக்கவசம் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர வாகனம் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த விழிப்புணர்வு பேரணி கடலூர் டவுன் ஹாலில் துவங்கி பாரதி ரோடு இம்பீரியல் சாலை கேவி டெக்ஸ், ஜவான்பவன் வழியாக மீண்டும் டவுன்ஹால் வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது . பேரணியில் கல்லூரி மாணவர்கள், பொதுநல அமைப்பை சேர்ந்தவர்கள் சுமார் 300 நபர்கள் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசத்துடன் கலந்து கொண்டனர். கடலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அமர்நாத், உதவி ஆய்வாளர்கள் சுந்தர்ராஜன், சிவக்குமார், மற்றும் கெளமன் பார்மா நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு தலைக்கவசம் வழங்கப்பட்டது.