பக்தர்களுக்கு தடையின்றி தண்ணீர் வழங்கிய மாநகராட்சி
திருநெல்வேலி மாநகராட்சி;
தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற டவுன் நெல்லையப்பர் கோவிலில் இன்று (ஜூலை 8) ஆனித்தேரோட்ட திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வழங்கப்பட்டது. இருப்பினும் வெயிலின் காரணமாக குடிநீர் காலியானதை தொடர்ந்து அடுத்தடுத்து தடையின்றி தண்ணீரில் கிடைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.