திருச்சுழி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) மாணவர் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.
திருச்சுழி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) மாணவர் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.;
திருச்சுழி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான மாணவர் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. இந்நிலையத்தில் கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் (COPA) நிலஅளவையர் (SURVEYOR) மின்சார பணியாளர் (ELECTRICIAN) இயந்திர வேலையாள் (MACHINIST) ஆகிய நான்கு தொழிற்பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளது. பயிற்சி முடித்தவுடன் தனியார் மற்றும் அரசு துறைகளில் அப்ரண்டீஸ் மற்றும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். விருப்பமுள்ள மாணவ மாணவிகள் தங்களது கல்வி மற்றும் சாதி அசல் சான்றிதழ்களுடன் அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். பயிற்சியின்போது மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.750/- கட்டணமில்லா பேருந்து சலுகை, விலையில்லா சீருடை (தையற்கூலியுடன்) விலையில்லா மிதிவண்டி, விலையில்லா வரைபடக்கருவிகள், விலையில்லா மூடுகாலணிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில், தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு தமிழ்புதல்வன் திட்டத்தின்கீழ் மற்றும் மாணவியருக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/- வழங்கப்படும். எனவே, திருச்சுழி சுற்று வட்டாரங்களில் உள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 70100-40810, 94864-62585, 76038-28709, 95669-29663 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்.