தலைமறைவாக இருந்த பிடியானை குற்றவாளி கைது
திண்டுக்கல்லில் கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த பிடியானை குற்றவாளி கைது;
திண்டுக்கல், தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த கொள்ளை வழக்கில் நிலக்கோட்டை, ஆவாரம்பட்டியை சேர்ந்த மாயாண்டிதேவர் மகன் சுப்புகாளை(48) என்பவரை தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து சுப்புகாளை நீதிமன்ற பிணை பெற்று வெளியே சென்று நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் திண்டுக்கல் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது. இதுதொடர்பாக DSP.சிபிசாய் சௌந்தர்யன் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் தர்மராஜ் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு நிலக்கோட்டையில் பதுங்கி இருந்த சுப்புகாளையை செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நீதிமன்ற நீதிமன்ற பிடியானையை நிறைவேற்றினர்.