மூலவர் சிவன் சன்னதியில் விளக்கு அணைந்து- அணைந்து பிரகாசமாக எரிந்த அதிசயம்! - பக்தர்கள் பரவசம்!
மூலவர் சிவன் சன்னதியில் விளக்கு அணைந்து- அணைந்து பிரகாசமாக எரிந்த அதிசயம்! - பக்தர்கள் பரவசம்!;
சிவகாசி- மூலவர் சிவன் சன்னதியில் விளக்கு அணைந்து- அணைந்து பிரகாசமாக எரிந்த அதிசயம்! - பக்தர்கள் பரவசம்!! சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல்லில் மீனாட்சியம்மன் சமேத கருநெல்லிநாதராக சிவன் லிங்க வடிவில் வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் சிவ பக்தர்கள் திருவாசக புராணத்தை படித்துக் கொண்டிருக்கும் போது மூலஸ்தானத்தில் சிவலிங்கத்திற்கு பின்புறம் அமைக்கப்பட்டுள்ள விளக்கு அணைந்து- அணைந்து மீண்டும், மீண்டும் பிரகாசமாக எரியும் காட்சி அரங்கேறியுள்ளது. இதனைக் கண்ட அங்கிருந்த பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர். இந்த அதிசய காட்சியை தனது அலைபேசியில் வீடியோவாக பதிவு செய்த பக்தர் ஒருவர், அதனை முகநூல் பக்கங்களிலும், இணையதளத்திலும் வெளியிட்டுள்ளதை பார்த்துள்ள பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிசயத்துடன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.