ஆம்பூர் அருகே குடும்பத்தகராறில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவர் கைது.
ஆம்பூர் அருகே குடும்பத்தகராறில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவர் கைது.;
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குடும்பத்தகராறில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவர் கைது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உடைய ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுமதி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று மூன்று குழந்தைகள் உள்ளனர். அவ்வப்போது கணவன்-மனைவி இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இன்று உடைய ராஜபாளையம் பகுதியில் அம்மன் கோவில் திருவிழா நடைபெற்ற நிலையில், வீட்டிலிருந்த அனைவரும் கோவிலுக்கு சென்றிருந்த போது, சுமதி மற்றும் அவரது கணவர் சத்யராஜ் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த சத்யராஜ் அருகாமையில் இருந்த கத்தியை எடுத்து மனைவி சுமதியின் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக தாக்கினார். இதில் நிலைகுலைந்த சுமதி ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மாதனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே சுமதி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சத்யராஜை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.