யங் இந்தியன் பார்லிமென்ட் நிகழ்ச்சி

திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லூரியில் யங் இந்தியன் பார்லிமென்ட் நிகழ்ச்சி நடைபெற்றது;

Update: 2025-07-08 19:20 GMT
திண்டுக்கல் யங் இண்டியன் அமைப்பு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு அரசியல் அமைப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக யங் இந்தியன் பார்லிமென்ட் என்ற தலைப்பில் இரண்டு நாள் நிகழ்ச்சி திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது. யங் இந்தியன் அமைப்பு நிர்வாகி தலைவர் கிருத்திகா வரவேற்றார். துணைத் தலைவர் கிரண் பாலாஜி, தளிர் தலைவர் நிரஞ்சனா துணைத் தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா வாழ்த்துரை வழக்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பழநி எம்எல்ஏ செந்தில்குமார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது: சட்டமன்றத்துக்கும் பாராளுமன்றத்திற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது, இரண்டும் ஒன்று தான் எம்.எல.ஏ என்பது ஒரு தொகுதிக்கு மட்டும், ஆனால் எம்பி என்பது ஆறு தொகுதிக்கு உள்ளடக்கியது. எனது பழனி தொகுதியில் 32 ஊராட்சிகள், நான்கு பேரூராட்சிகள், இரண்டு நகராட்சிகள் உள்ளது. இதுதான் என்னுடைய தொகுதி, இந்த தொகுதியில் உள்ள குறைகள் மற்றும் அடிப்படை வசதிகளை மக்கள் எங்களிடம் தெரிவிப்பதை, நாங்கள் சட்டசபையில் தெரிவித்து அரசிடம் நிதி பெற்று பணி செய்வோம். நாம் வெளிநாட்டுக்கு சென்றால் அவர்கள் நம்மிடம் கேட்பது நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள், அதற்கு நாம் இந்தியா தமிழ்நாடு என்று சொல்லிப் பாருங்கள், தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு உலகம் முழுவதும் ஒரு பெரிய ஈர்ப்பு உள்ளது. என்ன காரணம் என்றால் உலகத்தில் இப்பொழுது ஆறு மொழிகள் தான் உயிரோடு உள்ளது. அதில் பேச்சு மொழியாக இரண்டு உள்ளது அதில் நான்கு மொழிகளாக உயிரோடு உள்ளது. அதில் முக்கியமாக தமிழ் மொழி உலகம் முழுவதும் உள்ள மொழி ஆகும். நீங்கள் நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும். நீங்கள் நிறைய புத்தகங்கள் படித்தால் அதிலிருந்து வெளியே வருவது கஷ்டமாக இருக்கும். அரசியல் என்பது ஒரு கலை அதை தவறாக நினைக்கக் கூடாது. அரசியலில் மனசாட்சியுடன் இருக்க வேண்டும். இந்தியாவில் ஒரே மொழி கொண்ட நாடு கிடையாது, பல மொழி, பல மதம், பல இனம் கொண்ட நாடு இந்தியா. அரசியல் என்பது ஒரு அழகான கலை இந்த கலையை சரியாக பயன்படுத்தினால் நிச்சயமாக அடையாளப்படுத்தப்பட்ட ஒரு தலைவராக நிச்சயமாக நீங்களும் வரலாம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அரசியலில் ஏழை பணக்காரர் என்ற வித்தியாசமும் கிடையாது, திறமை தான் முக்கியம். அரசியலில் பொறுமை முக்கியம். மாணவர்கள் முயற்சியை கைவிடக்கூடாது முயற்சி தான் நம்மளை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என பேசினார்.

Similar News