மதில் சுவரை சீரமைக்க கோரிக்கை
வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தெப்பக்குளம்;
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தெப்பக்குளத்தின் கீழ்புறம் உள்ள மதில்சுவர் உடைந்துள்ளது. இதனால் அதன் வழியாக குப்பைகளும், கழிவுநீரும் குளத்துக்குள் சென்று சேர்வதால் சுகாதாரக்கேடாக காட்சியளிக்கிறது. மேலும் தெப்பக்குளத்தில் குளிக்கும் பக்தர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது. எனவே சேதமடைந்த மதில் சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.