வாலிபர் கைது

3.5 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது;

Update: 2025-07-09 05:17 GMT
ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் பூபாலன் தலைமையிலான போலீசார் ஈரோடு மொக்கையம்பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த வாலிபரை பிடித்து சோதனை நடத்தினர். இதில், அவர் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த நபர் ஈரோடு அடுத்த வள்ளிப்புரத்தான்பாளையத்தை சேர்ந்த கணேசன் மகன் கரன் (27) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கரனை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 3.5 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

Similar News