இரண்டு பேர் கைது

மது, லாட்டரி விற்ற 2 பேர் கைது;

Update: 2025-07-09 05:19 GMT
ஈரோடு மாவட்டம் பூதப்பாடி பகுதியில் டாஸ்மாக் கடை மூடிய நேரத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், அம்மாபேட்டை போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் கார்த்தி அங்கு சென்று, சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டு வந்த ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் காமராஜ் நகரை சேர்ந்த கார்த்தி (45) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 27 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், கோபி சாரதா மாரியம்மன் கோவில் பின்புறம் பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் சத்தியன் ரோந்து சென்றபோது, அங்கு அரசால் தடை செய்யப்பட்ட கேரளா மாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்ததாக, சித்தோடு நல்லகவுண்டம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி (75) என்பவரை கைது செய்து, 20 லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

Similar News