பெருமாள் கோவிலில் தைலக்காப்பு
ஈரோடு கோட்டை பெருமாள் கோயிலில் தைலக்காப்பு, அஞ்சனகாப்பு உற்சவ விழா துவங்கியது.;
ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் திரயோதசி திதியும், கேட்டை நட்சத்திரமும் கூடிய சுபயோக சுபதினத்தில் ஜேஷ்டாபிஷேக உற்சவ விழா தொடங்கியது. இவ்விழாவின் முதல் நிகழ்வான நேற்று காலை 7மணிக்கு திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, புண்யாகவஜனை ஹோமம், பூர்ணாஹுதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து உற்சவர்க்கு திருமஞ்சனமும், மூலவர்க்கு தைலம்சாத்துபடி நிகழ்வு நடந்தது.மேலும் மதியம் 12மணிக்கு ஸ்ரீ தேவி, பூமாதேவி ஸமேத கஸ்தூரி அரங்கநாதர் மூலஸ்தானம் சேருதல், மூலவர்சேவை நடைபெற்று மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இவ்விழாவை தொடர்ந்து இன்று புதன்கிழமை காலை 7 திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருமஞ்சனம் திருப்பாவாடை பூஜை செய்து மஹா தீபாராதனை காட்டப்பட்டு சுவாமி பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது.. இவ்விழாவின் தொடர் நிகழ்வாக வரும் 10தேதி முதல் 25ம் தேதி வரை காலை அபிஷேக பூஜையும், நாலாயிர திவ்ய பிரபந்த சேவையும் நடைபெறும்.26ம்தேதியன்று மண்டல பூஜை பூர்த்தி செய்து இவ்விழா நிறைவடையும்.