திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம்
மத்திய அரசு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பேர் கைது;
திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, DYFI உட்பட அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எம் பி சச்சிதானந்தம் தலைமையில் ஊர்வலமாக வந்த 200க்கும் மேற்பட்டோர். ரயில் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் ரயில் நிலையம் உள்ளே சென்று செங்கோட்டையிலிருந்து மயிலாடுதுறை செல்லக்கூடிய ரயில் முன்பு அமர்ந்து ஐந்து நிமிடம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து காவல்துறையினர் திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் உட்பட 100க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.