மதுரையில் ரயில் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம்.
மதுரையில் ரயில் நிலையம் முன்பு தொழிற்சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.;
நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக 13 தொழிற்சங்கங்கள் இன்று( ஜூலை. 9) வேலைநிறுத்தம் அறிவித்த நிலையில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலையிலிருந்து ரயில் நிலையம் நோக்கி ஆயிரக்கணக்கான தொழிற்சங்க உறுப்பினர்கள் விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஜூலை .9) காலை ஊர்வலமாக புறப்பட்டு ரயில் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.