நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட மேயர்
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்;
திருநெல்வேலி மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனு அளித்த கருப்பந்துறை பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் இன்று கருப்பந்துறை பகுதிக்கு நேரில் சென்று குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.