அபூர்வ வகை ஆந்தையை வனத்துறையினர் மீட்பு

கொடைக்கானல் கார்மேல்புரம் பகுதியில் சிக்கிய அபூர்வ வகை ஆந்தையை வனத்துறையினர் மீட்டு பத்திரமாக கொண்டு சென்று வனப்பகுதிக்குள் பறக்கவிட்டனர்.;

Update: 2025-07-09 10:18 GMT
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதி 70-க்கும் மேற்பட்ட சதவிகிதம் வனப்பகுதியாக உள்ளது, மேலும் இந்த வனப்பகுதியில் அரியவகை வன உயிரினங்களும் வசித்து வருகின்றன. இந்நிலையில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் இடமான கார்மேல் புரம் பகுதியில் மயங்கிய நிலையில் ஆந்தை ஒன்று நீண்ட நேரமாக இருந்துள்ளது, இதனை கண்ட இப்பகுதி மக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கார்மேல் புரம் பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறையினர் ஆந்தையை மீட்டு பெருமாள் மலை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று பத்திரமாக பறக்க விட்டனர், மேலும் பிடிபட்ட இந்த ஆந்தை அரிய வகை இனத்தைச் சேர்ந்தது என்றும் வழிமாறி இந்த பகுதிக்கு வந்திருக்கலாம் எனவும், உடலில் காயங்கள் ஏதும் இல்லை எனவும், அதிக வெட்பம் காரணமாக இந்த ஆந்தை மயங்கி இருக்கலாம் எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News