விளையாட்டுத் துறையில் மாத ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்
விளையாட்டுத் துறையில் சர்வதேச தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்கள் மாத ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தகவல்;
விளையாட்டுத் துறையில் சர்வதேச தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6000/- வீதம் வழங்கும் திட்டத்தின்கீழ் (2025-2026) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களை இணைத்து, விண்ணப்பத்தாரர் சார்ந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். தலைமையிடத்திற்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பிடத் தேவையில்லை. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணைத்து (3 எண்ணங்கள்) 31..07.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் – 624004. என்ற முகவரியிலும், 7401703504 என்ற கைபேசி எண்ணையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.