அதகப்பாடியில் திமுக உறுப்பினர் சேர்க்கை தீவிரம்

அதகப்பாடி பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை ஒன்றிய செயலாளர் காவேரி தலைமையில் நடந்தது.;

Update: 2025-07-09 12:59 GMT
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் ஆ மணி அவர்கள் ஆலோசனைப்படி தர்மபுரி மேற்கு ஒன்றிய செயலாளர் DL.காவேரி தலைமையில் இன்று மாலை அதகப்பாடி பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தர்மபுரி தொகுதி பொறுப்பாளர் தகவல் தொழில் அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் உதயசூரியன் அதகப்பாடி ஊராட்சியில் கிளைச் செயலாளர் BLA2, BDA நிர்வாகிகளுக்கு உறுப்பினர் சேர்க்க விவரம் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை போன் செயல் மூலம் உறுப்பினர் சேர்க்கை ஏற்கும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஒன்றிய அவைத்தலைவர் செல்வராஜ் பிரதிநிதி பசுவராஜ் துணைச் செயலாளர் சதீஷ்குமார் மற்றும் மூர்த்தி, கார்த்திக், ராமகிருஷ்ணன், பழனி, ஜெயப்பிரியா, கதிரவன், சின்னசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Similar News