பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களை நேரில் சென்று பாராட்டிய தஞ்சாவூர் எம்.பி ச.முரசொலி
பாராட்டு;
பத்தாம் வகுப்பு பொது தேர்வு 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு, "பள்ளிகளைத் தேடி நாடாளுமன்ற உறுப்பினர்" என்ற திட்டத்தின் கீழ், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி நேரில் சென்று, 100 விழுக்காடு தேர்ச்சிக்கு காரணமான பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்து, பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்து வருகிறார். அந்த வகையில் செவ்வாய்க்கிழமை அன்று பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாட்டாத்திக்கோட்டை, சித்துக்காடு, களத்தூர், கொன்றைக்காடு, சொர்ணக்காடு, பைங்கால் அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கும், கல்லூரணிக்காடு அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளிக்கும் சென்று பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி சால்வை பதக்கம் அணிவித்து சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் முன்னிலை வகித்தார். திமுக ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், கோ.இளங்கோவன், மு.கி.முத்துமாணிக்கம், வை.ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் அலிவலம் அ.மூர்த்தி, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மா.நாடிமுத்து, பி.பழனிவேல், ப.மாரியம்மாள், ஆர்.ராமநாதன், எம்.வெங்கடாசலம், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மைக் குழு நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.