தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது வேலை நிறுத்தம் 

வேலைநிறுத்தப் போராட்டம்;

Update: 2025-07-09 15:34 GMT
தொழிலாளர் விரோத நான்கு சட்டத்தொகுப்புகளை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். புதிய மின்சார சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டம் மற்றும் வன பாதுகாப்புச் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மக்கள், தொழிலாளர், விவசாயிகள் விரோத ஒன்றிய அரசைக் கண்டித்து, இடதுசாரிகள், தொழிற்சங்கங்கள் சார்பில், நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம், மறியல் போராட்டம், தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. தஞ்சாவூர் ஆற்றுப்பாலத்தில் பேரணியாக புறப்பட்டுச் சென்று, தலைமைத் தபால் நிலையம் முன்பு சிஐடியு மாநில செயலாளர் சி. ஜெயபால், தொமுச மாவட்டச் செயலாளர் கு.சேவியர், ஏஐடியுசி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சி.சந்திரகுமார், ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், ஏஐசிசிடியு  மாவட்டத் தலைவர் ராஜன், ஹெச்.எம்.எஸ் மாவட்டத் செயலாளர் சின்னப்பன், யுடிசி மாவட்டச் செயலாளர் மோகன்தாஸ் ஆகியோர் மறியல் போராட்டத்திற்கு தலைமை வகித்தனர்.  சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச்  செயற்குழு உறுப்பினர் என்.சரவணன், தஞ்சை மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், தஞ்சை ஒன்றியச் செயலாளர் கோவிந்தராஜ், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் து.கோவிந்தராஜ், பி.என்.பேர்நீதி ஆழ்வார், கே.அன்பு, இ.டி.எஸ்.மூர்த்தி, கே.வீரையன், சாய் சித்ரா, த. முருகேசன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் 252 பேர் கைது செய்யப்பட்டனர்.  பேராவூரணி, சேதுபாவாசத்திரம் சிபிஎம் ஒன்றியக்குழு சார்பில், பேராவூரணி தபால் நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம் தலைமை வகித்தார். சிபிஎம் பேராவூரணி ஒன்றியச் செயலாளர் வே.ரெங்கசாமி, மூத்த தோழர் வீ.கருப்பையா, சிஐடியு நீலமோகன், சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டனர். பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் எஸ்.கந்தசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆர்.ஞானசூரியன்,  கு.பெஞ்சமின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சி.பக்கிர்சாமி,  ஏ.கலியபெருமாள், சி.பூபேஷ் குப்தா மற்றும் 39 பெண்கள் உள்பட 119 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர். ஊரணிபுரம் அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு கலந்து கொண்டு பேசினார். வி.ச ஒன்றியச் செயலர் கோவிந்தராஜ், வி.தொ.ச ஒன்றியச் செயலாளர் ஆர்.சின்னப்பா, மாதர் சங்கம் மேரி உள்ளிட்ட 35 பேர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் தெற்கு ஒன்றியம் சார்பில், பூதலூர் நான்கு ரோட்டில் ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் தலைமையில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பழனிச்சாமி, சோலை.ரமேஷ், தமிழ்ச்செல்வன், மருதமுத்து, ராஜாங்கம், வசந்தா, ராஜூ, ராமலிங்கம், தங்கமணி, கண்ணன், சோலை.தெட்சிணாமூர்த்தி,  பெரியண்ணன், சுரேஷ், வின்சென்ட்,  முத்தையா, அருள்ராஜ் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.  பூதலூர் வடக்கு ஒன்றியம், திருக்காட்டுப்பள்ளி அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கம் ஒன்றியச் செயலாளர் ஆர்.உதயகுமார், வி.தொ.ச ஒன்றியச் செயலாளர் எஸ்.மெய்யழகன், மாதர் சங்கம் மாநிலக்குழு உறுப்பினர் பி.கலைச்செல்வி, வாலிபர் சங்கம் ஒன்றியச் செயலாளர் டி.வெங்கடேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.அபிமன்னன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.எம்.இளங்கோவன் உள்ளிட்ட 55 பேர் கலந்து கொண்டு கைதாகினர்.  திருவையாறு பாரத ஸ்டேட் பாங்க் முன்பு நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்தும், ஒன்றிய அரசை கண்டித்தும் விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் ராம், விதொச மாவட்ட தலைவர் ஆர்.பிரதீப் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம்,  சாலை மறியல் நடைபெற்றது. இதில், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் மதியழகன் , வெண்ணிலா, பழனிச்சாமி உள்ளிட்ட 16 பேரை திருவையாறு காவல்துறையினர் கைது செய்தனர். அம்மாபேட்டை நால் ரோட்டில் இருந்து 85க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகச் சென்று தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாதர் சங்கம் மாநிலத் தலைவர் வாலண்டினா, வி.தொ.ச மாநிலக்குழு உறுப்பினர் கே.பக்கிரிசாமி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் இ.வசந்தி, வி.ச ஒன்றியச் செயலாளர் கே.முனியாண்டி, வி.தொ.ச ஒன்றியச் செயலாளர் கே.கே.சேகர், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் யு.சரவணன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், விவசாயிகள் சங்க நிர்வாகி ஏ.நம்பிராஜன், மாற்றுத்திறனாளிகள் சங்கம் வி.ரவி உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட 55 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Similar News