பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் ஆய்வு

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்;

Update: 2025-07-09 19:12 GMT
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பிள்ளையார்நத்தம் ஊராட்சி, அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் பொது நிதியிலிருந்து ரூ.9.65 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பெண்கள் உடை மாற்றும் அறை கட்டுமான பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும், அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஸ்வச் பாரத் மிஷன் கிராமீன் (SBM-G) திட்டத்தின்கீழ் தலா ரூ.7.90 இலட்சம் மதிப்பீட்டில் நான்கு கழிப்பறை அறை கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். மேலும், வீர ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள வைகை ஆற்றின் ஓரங்களில் செடி, கொடிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள கழிவுகளை அகற்றி சுகாதாரமாக பராமரிக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) வினோதினி, நிலக்கோட்டை வட்டாட்சியர் விஜயலெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) பத்மாவதி, வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) பஞ்சவர்ணம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Similar News