நள்ளிரவில் மூதாட்டியை மீட்ட மேயர்
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்;
நெல்லை டவுன் மாதா நடுத்தெரு பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி வாசலில் நேற்று நள்ளிரவு மூதாட்டி ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த மேயர் ராமகிருஷ்ணன் சோயா டிரஸ்ட் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவிக்கு பின்பு காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். மேயரின் இந்த மனிதநேய செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.